merry christmas

happy

‘போதை கோதை’ என்ற பாடலில் அதர்வா,ஐஸ்வர்யா ராஜேஷ்

 

கௌதம்மேனன் இயக்கியுள்ள பாடலில் அதர்வா ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் நடித்துள்ளனர்.

கௌதம்மேனன் இயக்கத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’,’துருவ நட்சத்திரம்’ என இரண்டு படங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன.இதற்கிடையில்,தன்னுடைய ‘ஒன்றாக ஒரிஜினல்ஸ்’ நிறுவனத்தின் சார்பில் தனிப்பாடல்களையும் இயக்கி வருகிறார் கெளதம் மேனன்.

பின்னணிப் பாடகரான கார்த்திக் இசையமைக்க, மதன் கார்க்கி பாடல் எழுத,கெளதம் மேனன் இயக்கத்தில் பாடல்கள் உருவாகி வருகின்றன.இதுவரை இரண்டு பாடல்கள் இந்தக் கூட்டணி மூலம் வெளியிடப்பட்டுள்ளன.

முதலில் வெளியான ‘கூவை’ பாடலை,சின்னப்பொண்ணு பாடி, அவரே அந்த பாடலிலும் நடித்துள்ளார்.அவருடன் இணைந்து நடன இயக்குனர் சதீஷ் மற்றும் குழுவினர் நடனமாடியுள்ளனர்.இரண்டாவது வெளியான ‘உலவரவு’ பாடலை கார்த்திக் பாடியுள்ளார்.

டொவினோ தோமஸ், விஜய் டிவி புகழ் டிடி இருவரும் இந்த பாடலில் நடித்துள்ளனர்.இந்நிலையில்,மூன்றாவதாக ‘போதை கோதை’ என்ற பாடலை வெளியிடவிருப்பதாகத் தெரிவித்துள்ளார் கௌதம்மேனன். இந்த பாடலில் அதர்வா,ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் நடித்துள்ளனர்.விரைவில் இந்த பாடல் வெளியாக உள்ளது.

0
Shares