இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 47 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 214 ஓட்டங்களைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து, 215 எனும் வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாட களம் இறங்கிய இங்கிலாந்து அணி 44 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 218 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது.

இதேவேளை, ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்த தொடரின் இரண்டாவது போட்டி எதிர்வரும் 16ஆம் திகதி இடம்பெறவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

0
Shares