நயனுக்கு அப்படி என்ன விலைமதிப்பில்லாத பரிசை வழங்கினார் விக்னேஷ் சிவன் ?

தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் அதிகமாக நடித்துவருகிறார் நயன்தாரா.

அந்த வரிசையில் அடுத்ததாக வெளிவரவிருப்பது “கோலமாவு கோகிலா” திரைப்படமாகும் . இந்த படத்தில் நயன் போதைப்பொருள் கடத்துபவராக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

இத்திரைப்படத்தில் எதுவரையோ மற்றும் கல்யாண வயசு ஆகிய இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன

இந்நிலையில் அவருடைய காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவன் இந்த படத்திற்காக ஸ்பெஷலாக பாடலொன்றை எழுதியுள்ளார். அந்த பாடல் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0
Shares