நயன்தாராவின் அடுத்த அதிரடி ஆரம்பம்

சில மாதங்களுக்கு முன்பாக ‘லட்சுமி’ என்ற குறும்படம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. ஒரு பக்கம் ஆதரவும் மற்றொரு பக்கம் எதிர்ப்பும் ‘லட்சுமி’ குறும்படத்திற்கு அமைந்தது. கலவையான விமர்சனத்தை எதிர்க்கொண்டாலும் மக்களிடையே அதிகமாக சென்றடைந்தது.

இந்த குறும்படத்தை சர்ஜுன் என்பவர் இயக்கி இருந்தார். இவருடைய இயக்கத்தில் ‘மா’ என்ற குறும்படமும் சில மாதங்களுக்கு முன்பாக வெளியானது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சர்ஜுன் தற்போது புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார்.

இதில் நாயகியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த புதிய படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இந்த படம் முழுக்க முழுக்க ஹாரர் திரைப்படமாக உருவாக இருக்கிறது.இதன் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கி இருக்கிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு ‘நயன் 63’ என்று அழைத்து வருகிறார்கள்

0
Shares