“என்னுடைய காதலர் இப்படியெல்லாம் இல்லை என்றால் காதலை முறித்து விடுவேன் “-தாம்தூம் நடிகையின் பரபரப்பு பேட்டி

நடிகை கங்கனா ரணாவத் தமிழில் தாம் தூம் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன்பின்னர் அவர் ஹிந்தி திரையுலகிற்கு சென்றுவிட்டார். அங்கு அவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி பல படங்களில் முக்கியமான வேடங்களில் கதாநாயகியாக தொடர்ந்து நடித்துவருகிறார்.

இந்நிலையில் அவர் தன்னுடைய காதலர் எப்படி இருக்கவேண்டும் என்று பேட்டியொன்றில் கூறியுள்ளார்.

“எனக்கு கணவராக வருகிறர் நன்றாக சமைக்க தெரிந்தவராக இருக்க வேண்டும், மற்றவர்களை சிரிக்க வைக்க வேண்டும். அவர் இந்தியராக இருக்க வேண்டும். எனக்கு தேசபக்தி அதிகம். அவருக்கு நாட்டுப்பற்று இல்லை என்று தெரியவந்தால் நான் உடனே காதலை முறித்துவிடுவேன் ” என்று கூறியுள்ளார்.

0
Shares