“விஸ்வாசம்” யாருக்கான படம் தெரியுமா?

தல அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் . இவருடைய படங்களுக்கு வரும் ஓபனிங்கும் மிகப்பெரிய அளவில் இருக்கும்.

இந்நிலையில் அஜித் தற்போது மீண்டும் சிவாவின் இயக்கத்தில் விஸ்வாசம் திரைப்படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

இத்திரைப்படம் பற்றி எந்த ஒரு அப்டேட்டும் தெளிவாக வரவில்லை.ஆனால், இயக்குனர் சிவா ரசிகர்களை சந்திக்கும் போது சில தகவல்களை நேரடியாக கூறி வருகிறார்.

அப்படித்தான் அண்மையில் ஒரு ரசிகரை அவர் சந்தித்த போது ‘கவலையே படாதீங்க இது உங்களுக்கான மாஸ் படம் தான் ’ என்று சிவா கூறியிருந்தாராம் . இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

0
Shares