கமலுக்கு அருகில் இருக்கும் இந்த சிறுவன் யார் தெரியுமா? – இவருடைய தற்போதைய நிலை என்ன ?

சலங்கை ஒலி திரைப்படத்தை பார்த்த யாராலும் பப்லு எனும் சிறுவனை மறக்க முடியாது. கமலை பரதநாட்டிய போஸில் படமெடுக்க சென்று ஏடாகூடமாக படம் எடுத்து அத்தனை படங்களையும் வீணாக்கிவிடுவார்.

அந்த காலக்கட்டத்தில் இதுவொரு சிறந்த காமெடி காட்சியாக ரசிகர்களிடம் பாரிய வரவேற்பை பெற்றிருந்தது.. இதே பப்லூ சிறுவன் பாக்கியராஜின் பெரும் வெற்றிப்படமான சின்ன வீடு திரைப்படத்திலும் நடிகை கல்பனாவின் தம்பியாக நடித்திருந்தார்.இவரின் உண்மையான பெயர் சக்ரி டுலெட்டி.

இந்த இரண்டு படங்களின் பின்னர் இந்த சிறுவன் என்ன ஆனான் என்று யாருக்கும் தெரியாது. ஆனால், இந்த சிறுவன் இந்தியாவின் மாஸ்டர் கிளாஸ் நடிகரான கமல் மற்றும் தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோ அஜித்தை வைத்து படங்களை இயக்கியுள்ளார்.

 

சக்ரி டுலெட்டியின் அப்பா ஒரு வைத்தியர் . ஆனாலும் இவருக்கு கதை எழுதுவதில் அதிக விருப்பம் . இதனால் திரைப்படங்களுக்கு ஸ்க்ரிப்ட் எழுதுவதை தன்னுடைய பகுதிநேர வேலையாக செய்து கொண்டிருந்தார். அப்படியாகத்தான் கே. விஸ்வநாதன், பாலச்சந்தர், பாரதிராஜா, பாக்யராஜ் போன்ற சினிமா பிரபலங்களுடன் சக்ரி டுலெட்டியின் அப்பாவுக்கு பழக்கம் உண்டானது.

உன்னைப்போல் ஒருவன் படத்தின் மூலமாக இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமான சக்ரி டுலெட்டி. கமல் ஹாசனின் மகளான ஸ்ருதி ஹாசனை இசையமைப்பாளராக அறிமுகம் செய்தார்.

அதன் பின்னர் தொடர்ந்து இவர் அஜித்தின் பில்லா 2, சோனாக்ஷி சின்ஹாவின் Welcome to Newyork போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

தற்போது நயன்தாராவின் “கொலையுதிர் காலம்” திரைப்படத்தையும், தமன்னாவின் “காமோஷி” படத்தையும் இயக்கி வருகிறார் சக்ரி டுலெட்டி.

யார்?,எப்படி?, எப்போது? வேறு இடங்களிற்கு வருவார்கள் என்று சொல்ல முடியாது. பப்லுவாக அறியப்பட்ட அந்த சிறுவன் தான் இன்றைய இளம் தலைமுறை இயக்குனர் சக்ரி டுலெட்டி என்பது பலரும் அறியாத உண்மை.

0
Shares