நயனுக்கு ஜோடி இந்த நடிகரா ?-அதிர்ச்சியில் ரசிகர்கள்

லக்‌ஷ்மி, மா ஆகிய குறும்படங்களின் இயக்குனர் சர்ஜுனின் இயக்கத்தில் நடிகை நயன்தாரா புதிய படமொன்றில் தற்போது நடிக்க ஆரம்பித்துள்ளார்.

மாயா , கோலமாவு கோகிலா, அறம் ஆகிய திரைப்படங்களில் கதாநாயகியாக முக்கிய கதாபாத்திரத்தில் வலம் வந்த அவருடைய அடுத்த படம் இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிகமான எதிர்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில் தற்போது இப்படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக “மெட்ராஸ்” புகழ் கலையரசன் நடிப்பதாக தகவல் பரவி வருகிறது. இதைப்பற்றி படக்குழுவினர் இன்னும் அதிகாரபூர்வமான அறிக்கையை விடுக்கவில்லை .எனினும் தற்போது வளர்ந்து வரும் நடிகர் ஒருவரை நயனுக்கு ஜோடியாக நடிக்க வைத்திருப்பதாக வந்த தகவல் ரசிகர்களுக்கு ஆச்சர்யமளித்துள்ளது.

இது Horror திரைப்படம் என்பதால் படப்பிடிப்புக்காக சென்னையில் பேய் பங்களா செட் ஒன்றினையும் அமைத்து வருகின்றனர்.

0
Shares