க்ரோம் பயன்படுத்த இணையம் தேவையில்லை – கூகுளின் அதிரடி

 

இணையம் இல்லாமல் க்ரோம் பயன்படுத்தும் புதிய வசதியை கூகிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

தற்போதுள்ள டிஜிட்டல் உலகத்தில் ஸ்மார்ட் போனில் இணையம் பயன்படுத்தாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் என்ற அளவு பலரும் இணையத்தில் மூழ்கிப்போயுள்ளனர்.மக்களின் வசதிகளுக்கேற்ப பல நிறுவனங்களும் இணையம் மற்றும் போனில் சிறப்புச் சலுகைகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது.கூகுள் நிறுவனம் ஒரு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி பயனாளர்கள் இணையம் இல்லாமல் க்ரோம் பயன்படுத்தும் முறையை உருவாக்கியுள்ளது. பயனர்கள் தங்களுக்குத் தேவையான செய்தி மற்றும் தகவல்களை இன்டர்நெட்,வைஃபை இருக்கும் போது டவுன்லோட் செய்துகொண்டு அதை பிறகு ஓஃப்லைனில் பயன்படுத்திக் கொள்ளலாம்.இணையம் இல்லாத காலங்களிலும் இந்த வசதி மிகவும் பயன் தரும்.

இதைப் பயன்படுத்திக்கொள்ள பயனர் தங்களுக்கு விருப்பமான செய்திகளை முதலில் தேர்வுசெய்ய வேண்டும்.பின்பு பயனர் இருக்கும் இடம் மற்றும் விருப்பங்கள்,செய்திகளின் முக்கியத்துவத்தை அறிந்து கூகுளே தானாக டவுன்லோட் செய்து தரும்.இந்த வசதி தற்போது இந்தியா,நைஜீரியா,பிரேசில் போன்ற 100 நாடுகளில் செயல்படுத்தப்படவுள்ளது.

0
Shares