உலகக்கிண்ணம் பிரித்து வைத்த முதல் ஜோடி !

உலகக்கிண்ண காற்பந்தாட்ட போட்டிகள் பரபரப்பாக நடைபெற்றுவரும் இந்த சூழ்நிலையில் மெர்ஸி மற்றும் ரொனால்டோவுக்கு பெருமளவிலான ரசிகர்கள் உலகம் முழுவதும் உள்ளனர்.

ரஷ்யாவை சேர்ந்த காற்பந்தாட்ட பிரியர்களான காதல் ஜோடியொன்று கடந்த 2002 ம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

அவர்கள் காதலுக்கு வித்திட்ட காற்பந்தாட்ட விளையாட்டே தற்போது அவர்களின் மணமுறிவுக்கும் காரணமாக அமைந்துவிட்டது !

இதற்கு காரணம் என்னவென்றால் கணவர் மெர்ஸியின் ரசிகராகவும் மனைவி ரொனால்டோவின் ரசிகராகவும் இருந்தமை தானாம்.

இவர்கள் இருவரின் அணிகளிலும் மெர்ஸிக்கும் ரொனால்டோவுக்கும் பெனால்ட்டி வழங்கப்பட்டது .

மெர்ஸி கோல் அடிக்காத காரணத்தினால் மெர்ஸியை விட ரொனால்டோ சிறந்த வீரர் என்று மனைவி கிண்டலாக கூறியுள்ளார்.இதன் காரணமாக கணவருக்கும் மனைவிக்கும் இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டு சண்டையில் முடிந்துள்ளது.

இந்த ஒரே காரணத்திற்காக அவர்கள் இருவரும் விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளமை சற்று நகைச்சுவையாகவும் அதே நேரத்தில் மனவருத்தமாகவும் உள்ளது

0
Shares