மீண்டும் ரஜினியுடன் இணையும் கே.எஸ்.ரவிக்குமார்

90களின் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்-இயக்குனர் வெற்றிக்கூட்டணி என்றாலே எமக்கு முதலில் நினைவுக்கு வருவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கே.எஸ்.ரவிக்குமாரின் கூட்டணி தான்.

 

முத்து,படையப்பா ஆகிய படங்களை தமிழ் ரசிகர்களையும் தாண்டி சீன மக்களிடமும் பிரபலமான திரைப்படங்களாகும்.தொடர்ந்தும் இந்த கூட்டணியினர் இணைந்து லிங்கா,கோச்சடையான் ஆகிய படங்களை மக்களுக்காக கொடுத்திருந்தாலும் அவர்களின் முந்தைய படங்களுக்கு ஈடாக இருக்கவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன.இருந்தாலும் விமர்சனங்களை மீறி இவர்களுக்காகவே படத்தை திரையாரங்கில் சென்று பார்த்தவர்கள் பலர்.அதற்கு காரணம் இவர்கள் மீதான நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் இன்னும் குறையவில்லை என்றே சொல்லலாம்.

தற்போது மீண்டும் இந்த கூட்டணியினர் இணையவுள்ளதாக அறியப்பட்டுள்ளது.அதாவது புதிய படமொன்றுக்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,இயக்குனர் கே எஸ் ரவிக்குமாருக்கு கால்ஷூட் கொடுத்துள்ளார்.

பா.ரஞ்சித்தின் கபாலி,காலா திரைப்படங்களில் நடித்த பின்னர் மாஸ் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவுக்கு நடிப்பிலும் முக்கியத்துவம் செலுத்திவரும் ரஜினிகாந்த், அரசியல் களமுள்ள கதைகளை அதிகமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதுவரையில் அதிகமாக நல்ல குடும்ப கதைகளை உடைய சினிமாக்களை  ரசிகர்களுக்காக  கொடுத்திருந்த       கே. எஸ். ரவிக்குமார், சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து எப்படியான திரைப்படத்தை கொடுக்கவுள்ளார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

0
Shares