‘சர்கார்’ மற்றும் ‘என்.கே.ஜி’ இரண்டையும் நோக்கி மோதும் தோட்டா

அஜித்,விஜய்,சூர்யா நடித்த படங்கள் தனித்தனியாக வெளியானாலே அந்த நாட்கள் திருவிழா போன்று இருக்கும். இந்த நிலையில் வரும் தீபாவளி அன்று விஜய்யின் ‘சர்கார்’ மற்றும் சூர்யாவின் ‘என்.கே.ஜி’ ஆகிய படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் விஜய்யின் ‘சர்கார்’ இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் சூர்யாவின் ‘என்.கே.ஜி’ இயக்குனர் செல்வராகவன் ஆகிய இருவருமே தங்கள் டுவிட்டர் பக்கங்களில் தீபாவளி வெளியீடு என்று உறுதி செய்துள்ளனர்.

இந்நிலையில் தனுஷ் நடிப்பில் கௌதம்மேனன் இயக்கிய ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படமும் தீபாவளி போட்டியில் தற்போது இணைந்துள்ளதாக தெரிகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு ௮௦ வீதம் முடிந்துவிட்டதாகவும்,தனுஷ்,சசிகுமார் இணைந்து நடிக்கும் காட்சிகள் மட்டுமே இருப்பதாகவும்,இந்த படப்பிடிப்பும் விரைவில் முடிந்து வரும் தீபாவளிக்கு இந்த படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

0
Shares