மண்சரிவினால் போக்குவரத்து பாதிப்பு

ஹட்டன் – போடைஸ் பிரதான வீதியில் என்.சி பகுதியில் இன்று காலை ஏற்பட்ட மண்சரிவினால் பொது போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

குறித்த வீதியில்  நேற்று மாலை பாரிய கற்கள் புரள்வினால் வீதியில் வெடிப்புக்கள் ஏற்பட்டன. அதனை தொடர்ந்து நேற்று இரவு முதல் பெய்து வரும் மழை காரணமாக வெடிப்புக்கள் ஏற்பட்ட பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த மண்சரிவு காரணமாக போடைஸ் – மன்ராசி, அக்கரபத்தனை – டயகம ஆகிய பகுதிகளுக்கு பொது போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

குறித்த பிரதேசங்களுக்கு செல்பவர்கள் மாற்று பாதைககளை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0
Shares