போதைப் பொருளுடன் இருவர் கைது.

இரண்டரை இலட்சம் ரூபாய் பெறுமதியான கஞ்சா மற்றும் ஹெரோயினுடன் சந்தேக நபர்கள் இருவரை வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தலைமையிலான குழுவினர்களான பொலிஸ் பரிசோதகர் பன்டார, பொலிஸ் சாஜன்களான எம்.என்.மென்டிஸ், இந்திக்க பெரேரே, எஸ்.தினுச, எஸ்.நிமால் உள்ளிட்டோர் கைது செய்துள்ளனர்.

வாழைச்சேனை பிறைந்துறைச்சேனை பிரதேசத்தில் வெவ்வேறு பகுதியில் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவரை நேற்று மாலை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

0
Shares