போலி நாணயத்தாள்களுடன் கைது.

யாழ்ப்பாண நகர்ப் பகுதியில், 5,000 ரூபாய் போலி நாணயத்தாள்கள் வைத்திருந்த 18 வயதுடைய ஒருவரை, யாழ்ப்பாணப் பொலிஸார், நேற்று  மாலை கைதுசெய்துள்ளனர்.

பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே, யாழ்ப்பாணம் – பொம்மைவெளிப் பகுதியில் வைத்து குறித்த நபர் கைதுசெய்யப்பட்டார்.

கைதுசெய்யப்பட்டவரிடமிருந்து, 5,000 ரூபாய் போலி நாணயத்தாள்கள் மூன்று கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்டவரைத் தடுத்து வைத்து, விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

0
Shares