FIFA உலகக்கிண்ண கால்பந்து 2வது அரைஇறுதி ஆட்டத்தில் இன்று இங்கிலாந்து-குரோஷியா அணிகள் பலப்பரீட்சை!

FIFA உலகக்கிண்ண தொடரின் 2-வது அரைஇறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து-குரோஷியா அணிகள் இன்று இரவு 11.30 மணிக்கு பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஆக்ரோஷமாக விளையாடக்கூடிய அணிகளில் ஒன்றான குரோஷியா 2-வது முறையாக அரைஇறுதிக்குள் (இதற்கு முன்பு 1998-ம் ஆண்டு) நுழைந்துள்ளது. குரோஷிய அணி முதல்முறையாக இறுதிசுற்றை எட்டும் வேட்கையில் உள்ளது.

28 ஆண்டுகளுக்கு பிறகு அரைஇறுதிக்கு தகுதி பெற்றிருக்கும் இங்கிலாந்து அணி 1966ம் ஆண்டு சாம்பியனானது. 52 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முனைப்புடன் யுக்திகளை வகுத்துள்ளது.

இவ்விரு அணிகளும் தகுதி சுற்று, நட்புறவு போட்டிகளில் மோதியுள்ளன. ஆனால் உலக கோப்பை போட்டியில் நேருக்கு நேர் மல்லுகட்டுவது இதுவே முதல் முறையாகும். சம பலத்துடன் திகழும் இவ்விரு அணிகளில் ஆதிக்கம் செலுத்தப்போவது யார்? என்பதை யூகிப்பது கடினமாகும். ஆட்டம் இன்னொரு முறை பெனால்டி ஷூட்-அவுட்டுக்கு சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

 

0
Shares