சீனாவில் இருந்து பிரதிநிதிகள் குழுவொன்றை இலங்கைக்கு அழைக்கவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது

டின்மீன் விவகாரம் தொடர்பில் பல பிரச்சினைகள் எழுந்துள்ள நிலையில், சீனாவில் இருந்து பிரதிநிதிகள் குழுவொன்றை இலங்கைக்கு அழைக்கவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

டின்மீன் விவகாரம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில், இடம்பெற்ற போதே அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த கலந்துரையாடலில், கொழும்பிலுள்ள சீனத் தூதரகத்தின் இரண்டாம் செயலாளர், சீன தூதரகம், சுங்கத் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் மற்றும் இறக்குமதியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது கருத்து வெளியிட்ட அமைச்சர் ரிஷாட் பதியுதீன், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும், டின்மீன்களை மே மாதத்தில் இருந்து இலங்கை பெற்றுக் கொள்ளவில்லை.

அவற்றுள் ஏற்பட்ட பழுது காரணமாக இந்த நிலை ஏற்பட்டது.

இந்தநிலையில், அதுகுறித்து சினேகபூர்வ கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவே, சீனாவில் இருந்து பிரதிநிதிகள் குழுவொன்றை இலங்கைக்கு அழைக்க எதிர்ப்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

0
Shares