கருஜயசூரிய அடுத்தவாரம் கையெழுத்திடவுள்ளார்

நாடாளுமன்றத்தில் கடந்த 5 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட தேசிய கணக்காய்வு சட்டமூலத்தில் சபாநாயகர் கருஜயசூரிய அடுத்தவாரம் கையெழுத்திடவுள்ளார்.

திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் அதன் சட்டரீதியான தன்மையை ஆராய்வதற்காக தற்போது குறித்த சட்டமூலத்தின் பிரதி சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் தேசிய கணக்காய்வு சட்டமூலத்தில் இருபது புதிய திருத்தங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன,

மக்கள் விடுதலை முன்னணி மற்றும் கூட்டு எதிரணியினராலேயே அதிக திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

0
Shares