மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளதா?

மரண தண்டனையை அமுல்படுத்தவுள்ளதாக வெளியிடப்பட்டுள்ள அறிவித்தலை திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என சர்வதேச மன்னிப்பு சபை இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

போதைப்பொருள் கடத்தல்கள் அதிகரித்துள்ள நிலையில் மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

இதற்கமைய போதைப்பொருள் கடத்தல்கள் தொடர்பில் சிறையில் உள்ளவர்களே மரணதண்டனைக்கு உட்படுத்தப்பவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையில் 40 வருடங்களின் பின்னர் இந்த மரண தண்டனை நிறைவேற்றத்தை அமுல்படுத்தினால் இலங்கையின் கீர்த்திக்கு பாதிப்பு ஏற்படும் என மன்னிப்பு சபை சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே அந்த தீர்மானத்தை நிறுத்திவைக்குமாறு மன்னிப்புசபையின் தென்னாசிய உதவிப்பணிப்பாளர் தினுசிக்கா திஸாநாயக்க இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.

குற்றங்களுக்கான தண்டனை, மரண தண்டனையாக இருக்கவேண்டும் என்பதை தாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

 

 

0
Shares