மரண தண்டனைக் கைதிகளின் பெயர்ப்பட்டியல் கையளிப்பு

போதைப்பொருளுடன் தொடர்புடைய பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்டு நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் பெயர்ப்பட்டியலை இன்று ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாக நீதியமைச்சு தெரிவித்துள்ளது.

மரண தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பில் ஜனாதிபதி  எடுத்த தீர்மானத்திற்கு அமைய நீதியமைச்சினால் அந்தப் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், கடந்த 10ஆம் திகதி கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் போதைப்பொருள் விற்பனை செய்வோருக்கு எதிராக மரண தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

நீதியமைச்சர் தலதா அத்துகோரல சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கிகாரமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0
Shares