மீண்டும் இணையும் காதல் ஜோடி

‘தூம்’ படத்தின் நான்காம் பாகத்தில் சல்மான் கான் நடிக்க இருப்பதாகப் பொலிவுட் மீடியாக்கள் கிசுகிசுக்கின்றன.பாலிவுட் சீரிஸ் படங்களில்,’தூம்’ படத்துக்கு முக்கிய பங்குண்டு.

பொலிவுட் மட்டுமின்றி,பிறமொழி சினிமா ரசிகர்களுக்கும் இந்த படம் பிடிக்கும்.ஆதித்யா சோப்ரா தயாரிக்கும் இந்தப் படத்தின் முதல் இரண்டு பாகங்களை சஞ்சய் காத்வியும்,மூன்றாம் பாகத்தை விஜய் கிருஷ்ணா ஆச்சர்யாவும் இயக்கினார்.

அபிஷேக் பச்சன்,உதய் சோப்ரா இருவரும் மூன்று பாகங்களிலும் நடிக்க,இன்னொரு பிரதான வேடத்தில் முதல் பாகத்தில் ஜோன் ஆபிரஹாமும்,இரண்டாம் பாகத்தில் ஹ்ருத்திக் ரோஷனும்,மூன்றாம் பாகத்தில் அமீர் கானும் நடித்தனர்.

மூன்றாம் பாகம் வெளியாகி 5 வருடங்களுக்குப் பிறகு,தற்போது நான்காம் பாகத்துக்கான வேலைகள் தொடங்கியுள்ளனர்.இதில்,பிரதான வேடத்தில் சல்மான் கான் நடிக்கலாம் எனப் பொலிவுட் மீடியாக்கள் கிசுகிசுக்கின்றன.அத்துடன்,கத்ரினா கைஃப்பிடம் நாயகியாக நடிக்கக் கேட்டிருக்கிறார்களாம்.

0
Shares