தமிழ்ப்படம்- 2 ரசிகர்களுக்கு பிடிக்குமா ? – திரை விமர்சனம்

சி.எஸ் அமுதனின் இயக்கத்தில் சிவாவின் நடிப்பில் இன்றைய தினம் வெளியாகியுள்ளது தமிழ்ப்படம் 2

இந்த திரைப்படத்தின் கதை என்னவென்று படத்தை பார்த்தவர்களோ கூறினால் அவர்களுக்கு பெரிய விருதுகளை அளித்து கெளரவப்படுத்தலாம்

படம் முழுவதுமாக சிவாவை மட்டுமே நம்பி எடுக்கப்பட்டது போல தெரிகிறது. அந்த நம்பிக்கையை அவர் ஏமாற்றவும் இல்லை. அவரது நடிப்பு, body language மற்றும் வசன உச்சரிப்பு இந்த படத்தின் மிகப்பெரிய பிளஸ்.

முதல் பாகத்தை விட இரண்டாவது பாகத்தில் பல திரைப்படங்களை சற்று அதிகமாகவே கலாய்த்துள்ளார். ரஜினி, கமல், அஜித், விஜய், விஷால் உள்பட எந்த பெரிய நடிகரையும் இவர்கள் விட்டுவைக்கவில்லை.

திஷா பாண்டே மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகிய இருவரும் இந்த படத்தின் நாயகிகள் என்று ஏற்க முடியவில்லை என ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்

இதுவரை மொக்கை காமெடி செய்து வந்த சதீஷ் தற்போது மொக்கை வில்லனாக அவதாரம் எடுத்துள்ளார். 2.0 அக்க்ஷய்குமார் கெட்டப் முதலான பல்வேறு கெட்டப்புகளில் தோன்றியுள்ளார்.

இயக்குனர் சி.எஸ். அமுதன், தமிழில் வெளிவந்த அனைத்து படங்களையும் பார்த்திருப்பார் போலும் . ஒவ்வொரு படத்திலும் இருக்கும் முக்கிய காட்சிகளை கலாய்ப்பதற்கு அதிகமாக யோசித்துள்ளார்.

இருப்பினும் ஒரு படத்தில் இரண்டரை மணி நேரமும் கலாயத்து கொண்டே இருந்தால் ஒரு கட்டத்தில் சலித்து விடுகிறது. கொஞ்சம் கதையையும் சேர்த்து கலாய்த்தலை கலந்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.

மொத்தத்தில் தமிழ் சினிமாவில் பல படங்களை தவறாமல் பார்த்தவர்களுக்கு இது சிரித்து ரசிக்க ஜாலியான படமாகவும் , மற்றவர்களுக்கு சுமாரான படமாகவும் இருக்கும்.

0
Shares