சதம் அடித்த கருணாரத்ன.

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலியில் இன்று ஆரம்பமானது.

நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களமிறங்கியது.

இதன்படி தனது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி சற்று முன்னர் வரை 8 விக்கட்டுக்களை இழந்து 205 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இலங்கை அணி சார்ப்பில் திமுத் கருணாரத்ன ஆட்டமிழக்காமல் 113 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளார்.

திமுத் கருணாரத்ன பெற்ற 8 ஆவது சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

0
Shares