பேருந்து விபத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு.

காலி – மாத்தறை பிரதான வீதியின் ஹபராதுவ, ஹெதிவத்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 23 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று காலை கொக்கல முதலீட்டு வலயத்திற்கு ஊழியர்களை அழைத்து சென்ற பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகி இருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பேருந்தை கட்டுப்படுத்த முடியாமல் பாதையை விட்டு விலகி அருகில் இருந்த மரத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்களை ஹபராதுவ மற்றும் கராபிட்டிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்து தொடர்பில் பேருந்தின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஹபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0
Shares