ரஜினி நடித்து வரும் படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத்

 

பல வருடங்களாகவே ரஜினி நடிக்கும் படங்களில் தொடக்கப் பாடல்களை எஸ்.பி.பி.தான் பாடி வருகிறார்.அது எந்த இசையமைப்பாளராக இருந்தாலும் சரி எஸ்.பி.பி.யை தொடக்கப் பாடலைப் பாட வைத்துவிட வேண்டும் என்பது ரஜினியின் எழுதப்படாத விதி.ஆனால் ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான ‘கபாலி’ மற்றும் ‘காலா’ படங்களில் தொடக்கப் பாடலை எஸ்.பி.பி. பாடவில்லை.

பா.இரஞ்சித் இயக்கிய இந்தப் படங்களுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.இரண்டு படங்களிலும் அருண் ராஜா காமராஜ் தான் தொடக்கப் பாடலை எழுதி,பாடியிருந்தார்.

இந்நிலையில்,அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு,டார்ஜிலிங் மற்றும் டேராடூனில் நடைபெற்று வருகிறது.ரஜினிக்கு வில்லனாக விஜய்சேதுபதி நடிக்கிறார்.

ரஜினியின் மகன்களாக பாபி சிம்ஹா,சனந்த் ரெட்டி இருவரும் நடிக்க,சனந்த் ரெட்டி ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார்.சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு,அனிருத் இசையமைக்கிறார்.இந்தப் படத்தில்,ரஜினியின் தொடக்கப் பாடலை எஸ்.பி.பி.யை பாடவைக்க அனிருத் முடிவு செய்துள்ளார்.

0
Shares