இராணுவம் கோரும் தகவல்களை வழங்க வேண்டாம்

இராணுவம் கோரும் தகவல்களை வழங்க வேண்டாம் என வடமாகாண அதிகாரிகளிடம் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், 9 மாகாணங்களும் சுயாட்சியைக் கோர வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாகாணங்கள் தமக்குள் இணைய வழிவகுக்க வேண்டும் என்ற கருத்தை சிங்கள மக்கள் மத்தியில் பரப்பி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

0
Shares