வைரமுத்து உதிர்த்த முத்தான வார்த்தைகள்

கவிப்பேரரசு வைரமுத்து இன்றைய தினம் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார்.அவர் நேற்று சென்னையில் நடைபெற்ற தன்னுடைய சிறப்பு நிகழ்ச்சியொன்றில் தன்னுடைய கருத்தை கூறி யிருந்தார்.

அதாவது ஒரு இனத்தினுடைய வரலாறும் பண்பாடும் மிக முக்கியமானவையென்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார் .மேலும் அவை இரண்டும் தான் ஒரு இனத்தினுடைய சிறப்பு என்றும் அவர் கூறியுள்ளார் .

தற்போது மேலைத்தேய கலாசாரம் நமது நாட்டிலும் ஊடுருவி விட்டது.அதை நாங்கள் பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தாலும் அதில் முழுவதுமாக மூழ்கிவிடக்கூடாது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

பிரித்தானியா ,சீனா ,கிரேக்கம் ஆகிய நாடுகளில் இன்றும் அவர்கள் கலாசாரம் கட்டிக்காக்கப்படுகிறது .பல தேசங்களிற்கு நாகரிகம் கற்பித்த மூத்த குடிகளான தமிழர் தங்கள் பெருமைகளை மறந்துவிடுகிறார்கள்.

பொதுவாக எழுபதுகளுக்கு முற்படட காலக்கட்டத்தில் சினிமாப்பாடல்கள் என்றாலே பாட்டுக்கு மெட்டு அமைப்பார்கள் .அதாவது பாடலை எழுதிவிட்டு பின்னர் அதற்கு இசையமைப்பார்.ஆனால் வைரமுத்து சினிமாவில் நுழைந்த காலக்கட்டத்தில் மெட்டுக்கு பாட்டு எழுதும் முறை அறிமுகமானது .ஆரம்பகாலத்தில் கவிஞர்களுக்கு இது ஒரு பெரும் சவாலாக இருந்து வந்தது.

இதற்கெல்லாம் முகம்கொடுத்து பல சவால்களை எதிர்கொண்டு தன்னுடைய முத்தான வரிகளால் தனக்கென்று ஒரு தனியான இடத்தை பிடித்து அதை இன்றுவரை தக்க வைத்துக்கொண்டிருக்கும் ஒரு மாபெரும் கவிஞராக கவிப்பேரரசு வைரமுத்து திகழ்ந்து வருகிறார்.

0
Shares