இந்திய அணி 8 விக்கெட்டுகளினால் வெற்றி

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி; களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 49.5 ஓவர்கள் நிறைவில் 268

ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இதனை அடுத்து 259 எனும் வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாட களம் இறங்கிய இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 269 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றுள்ளது.

இந்திய அணி சார்பில் அதிகபடியாக ரோகித் சர்மா ஆட்டமிழக்காமல் 114 பந்துகளுக்கு 137 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

இதேவேளை, இந்த தொடரின் இரண்டாவது போட்டி நாளை இடம்பெறவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

0
Shares