உலக வங்கி 200 மில்லியன் டொலர்களை கடனாக வழங்கவுள்ளது

இலங்கையின் சுகாதார சேவையை மேம்படுத்த, உலக வங்கி 200 மில்லியன் டொலர்களை கடனாக வழங்கவுள்ளது.

இதற்கான அனுமதியை உலக வங்கியின் பணிப்பாளர்கள் சபை நேற்றைய தினம் வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்களது சுகாதார சேவைகளை பூர்த்தி செய்தல் மற்றும் தொற்றா நோய்களை அடையாளம் கண்டு முகாமை செய்தல் உள்ளிட்ட இலக்குகளில் இந்த கடன்தொகை வழங்கப்படவுள்ளது.

அத்துடன், இலங்கையின் சுகாதாரத்துறை திருப்திகரமான வளர்ச்சியை வெளிப்படுத்தி உள்ளது.

எனினும், தெற்காசிய நாடுகளில், அதிக வயதாகும் சனத்தொகையை கொண்ட நாடு என்ற அடிப்படையில், சுகாதாரத் சேவையின் முன்னேற்றம் முக்கியமானதாக கருதப்படுகின்றது.

இந்த நிலையிலேயே, இந்த கடன் ஊடாக சுகாதார வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

 

 

 

 

0
Shares