மீண்டும் இணையுமா சிவா-நயன் ஜோடி?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு தமிழ் சினிமாவில் ஒரு தனியான இடம் இருக்கிறது.இவருடன் இணைந்து நடிக்கும்  வாய்ப்புக்காக பல கதாநாயகர்கள் தவம் கிடக்கிறார்கள்.

ஏற்கெனவே “வேலைக்காரன்” திரைப்படத்தில் நயன்தாரா சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்திருந்தார்.அதிலிருந்து சினிமாவில் சிவகார்த்திகேயனுக்கான முக்கியத்துவம் இன்னும் அதிகரித்துவிட்டது என்றே சொல்லலாம்.அதன் பின்னர் நடிகை சமந்தாவும் சிவகார்த்திகேயனுடன் “சீம ராஜா” திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளார்.

தற்போது மீண்டும் நயன் சிவா ஜோடி இணையவுள்ளதாக தயாரிப்பாளர் RK ராஜாவின் தரப்பிலிருந்து தகவல் வந்துள்ளது .

சிவகார்த்திகேயனின் பினாமியான RK ராஜா டுவிட்டரில் சில நடிகர்களின் பெயரை குறிப்பிட்டு பதிவொன்றை இட்டுள்ளார்.ஆகவே இந்த குழுவினர் திரையில் இணையவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

0
Shares