3000 ஆண்டுகள் ஆகியும் பிரியாத காதலர்கள் !

உக்ரெயின் நாட்டில் அகழ்வாராய்ச்சியின்போது 3000 வருடங்கள் பழைமையான எலும்புக்கூடுகள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதில் அதிசயம் என்னவென்றால் அது ஒரு காதல் ஜோடியின் எலும்புக்கூடுகள் என்பதுதான் !

அதிலும் அந்த எலும்புக்கூடுகள் இரண்டும் சேர்ந்து புதைக்கப்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல் காதலியின் கை காதலனின் கழுத்தை கட்டியணைத்தபடி கண்களை நேராக பார்த்தபடி இருப்பது சிறப்பம்சமாகும்

இவர்கள் தம்பதிகளாக இருந்திருக்கவும் வாய்ப்புகள் உள்ளதாக அறியப்படுகிறது.

ஆதிகாலத்திலேயே உக்ரெய்ன் நாட்டில் காதலுக்கு அதிகளவு மதிப்பும் முக்கியத்துவமும் கொடுத்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

0
Shares