Prayut Chan-o-cha, பிரதமர் ரணில் விக்கரமசிங்கவை இன்று காலை சந்திக்கவுள்ளார்

தாய்லாந்து பிரதமர் ப்ரயூத் சான் ஓ சா (Prayut Chan-o-cha), பிரதமர் ரணில் விக்கரமசிங்கவை இன்று காலை சந்திக்கவுள்ளார்.

இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு அவர் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளார்.

தாய்லாந்து பிரதமர் ப்ரயூத் சான் ஓ சா, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நேற்று பிற்பகல் நாட்டை வந்தடைந்தார்

இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே அவர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கிலேயே அவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.

தாய்லாந்து பிரதமரை வரவேற்பதற்கான உத்தியோகபூர்வ நிகழ்வு, ஜனாதிபதியின் தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை இடம்பெற்றது.

அத்துடன், இந்த நிகழ்வினை அடுத்து, இருநாட்டுத் தலைவர்களுக்கும் இடையில் பேச்சுவாரத்தைகள் இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

இதேவேளை, தாய்லாந்து பிரதமர் ப்ரயூத் சான் ஓ சா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை இன்று காலை சந்திக்கவுள்ளார்.

அத்துடன், கண்டிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள தாய்லாந்து பிரதமர், மகாநாயக்க தேரர்களை சந்திக்கவுள்ளதுடன், பேராதனை தாவரவியல் பூங்காவில் மரக்கன்று ஒன்றையும் நாட்டவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தாய்லாந்து பிரதமர் ப்ரயூத் சான் ஓ சா (Prayut Chan-o-cha) வின் இந்த விஜயத்தின் போது சில முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
Shares