1½ ஆண்டாக கவுண்டி போட்டிகளில் விளையாடியது உதவியாக இருக்கிறது- அஸ்வின்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நடந்துவரும் நிலையில் 5 விக்கெட் கைப்பற்றியுள்ள அஸ்வின், கவுண்டி போட்டிகளில் விளையாடியது உதவிகரமாக இருந்தது என்றார்.

அஸ்வின் கூறியதாவது:

கடந்த 1½ ஆண்டாக இங்கிலாந்து கவுண்டி போட்டிகளில் அதிக நேரம் விளையாடி இருக்கிறேன். இங்கு வந்ததும் பந்து வீசும் கூடுதல் வேகத்துடன் வீசினால் பலன் அளிக்கும் என்பதை உணர்ந்தேன். அதற்கு ஏற்றாற்போல் பந்து வீசினேன்.

எனது பந்து வீச்சு முறையில் சிறிது மாற்றத்தை எளிமையாக செய்து வீசினேன். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. கவுண்டி போட்டிகளில் விளையாடியது எனக்கு உதவிகரமாக இருந்தது என்றார்.

 

 

0
Shares