கலைஞருக்காக நடிகை ஹன்சிகா எடுத்த அதிரடி முடிவு

தன்னுடைய குழந்தைத்தனமான முகத்தால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை ஹன்சிகா . ஆரம்பத்தில் அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்துவந்தவர் தற்போது படங்களை தேர்வு செய்யும் வேலையில் இருக்கிறார்.

அண்மையில் அவருடைய நடிப்பில் படம் எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில் இன்று ஹன்சிகாவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவரது 50வது படத்திற்கான தலைப்பை நடிகர் தனுஷ் வெளியிட இருந்தார்.

ஆனால் நேற்று முன்தினம் கலைஞர் கருணாநிதி அவர்கள் மறைந்ததால் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இன்றைய தினம் ஹன்சிகாவின் படத்தின் தலைப்பு வெளிவராதாம்.

இந்த விடயத்தை ஹன்சிகாவே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

0
Shares