“நான் அப்படி செய்தது என் பிள்ளைகளுக்கு பிடிக்கவில்லை”- கமல்ஹாசன்

இதுவரையில் சினிமாவில் மட்டுமே தன்னுடைய திறமையை வெளியுலகிற்கு காட்டிவந்த உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது தீவிர அரசியலில் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார். பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் அவர் நடிக்கவுள்ள இந்தியன்-2 திரைப்படம் தான் இவருடைய கடைசி படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இப்படியாக அரசியல் வாழ்ககைக்காக சினிமாவை விடுவது என்னுடைய மகள்களுக்கு பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார் கமல்.குறிப்பாக ஸ்ருதிஹாசன் இதை வெளிப்படையாகவே கேட்டாராம். “அரசியலுக்கு சென்றுவிட்டால் ஒரு கலைஞனை இழந்துவிடுவார்கள் என்று நினைக்கிறேன் .நான் இந்த பாதையில் தான் செல்லவேண்டும் என்று அவர்களுக்கு புரியவைத்தேன். ஆகையால் அவர்கள் அதை ஏற்றுக்கொண்டு என்னுடன் இருப்பதில் மகிழ்ச்சி” என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

0
Shares