இலங்கையின் பலபகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை

மேல் ,மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் மாத்தறை மற்றும் காலி மாவட்டங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய நேரிடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் 50 mm அளவில் மழைவீழ்ச்சி பதிவாக கூடும் என்றும் வடமேல் மாகாணத்தில் மழை பெய்யக் கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊவா மாகாணத்திலும் முல்லைத்தீவு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களிலும் மாலை 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய பெய்ய நேரிடும் என்று சுட்டிகாட்டப்பட்டுள்ளது.

0
Shares