எரிபொருள் விலை அதிகரிக்குமா? குறையுமா?

உலக சந்தையில் எரிபொருள் விலையில் ஏற்படும் மாற்றத்திற்கமைய இலங்கையின் எரிபொருள் விலையை நிர்ணயம் செய்யும் குழுவின் கூட்டம் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது.

இதன்போது எரிபொருட்களின் விலைகளை அதிகரித்தல் அல்லது குறைத்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட உள்ளது.

எரிபொருள் விலைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக அண்மையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

கனியவள அபிவிருத்தி அமைச்சின் செயலாளரின் பிரதிநிதி திரைசேரியின் பிரதி செயலாளர் மற்றும் திரைசேரியின் பணிப்பாளர்கள் இருவர் ஆகியோர் இந்த குழுவில் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

0
Shares