ஏமன் நாட்டில் நடைபெற்ற விமானத் தாக்குதலில் 12 பேர் பலி

ஏமன் நாட்டின் சடா பகுதியில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய விமானத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஏமன் அரசாங்கத்துக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு சவுதி புரட்சிப் படையினர் கடந்த இரண்டு வருடங்களாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அத்துடன்  சனா உள்பட பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து அந்த பகுதிகளை சுற்றி சோதனைச்சாவடிகள் அமைத்துள்ளனர்.

இந்நிலையில் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் ஏமன் அரசாங்கத்துக்கு ஆதரவு அளித்து வருகின்றன.அத்துடன் சவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து விமான தாக்குதல்களை கூட்டுப்படைகள் மேற்கொண்டு வருகின்றன.இந்நிலையில் ஏமனின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள சடா நகரில் சவுதி புரட்சிப் படையினரை குறிவைத்து சவுதி கூட்டுப்படைகள் நேற்று விமானத் தாக்குதல் நடத்தினர்.

இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 12 பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

0
Shares