முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.

லோர்ட்ஸ் மைதானத்தில் நேற்று இடம்பெறவிருந்த இந்த போட்டி, ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

முன்னதாக, எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்திருந்தது.

இநத நிலையில் 2ஆவது டெஸ்ட் போட்டி நேற்று நடைபெறவிருந்த நிலையில், நாணயசுழற்சிக்கு முன்னதாகவே மழை பெய்தது.

மதிய போசன இடைவேளை வரை ஆட்டம் தொடங்கப்படாத நிலையில், அதன் பின்னரும் மழை பெய்ததை அடுத்து, முதல் நாள் ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.

0
Shares