யாழ்ப்பாணத்தில் கேரள கஞ்சாவுடன் மூவர் கைது

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அனுராதபுர சந்தியில் நேற்றிரவு 3.5kg கேரள கஞ்சாவை உப்புவெளி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

யாழ்பாணத்திலிருந்து திருகோணமலையை வந்தடைந்த மூவரிடம்(2 பெண்கள் ,1ஆண்) மேற்கொண்ட சோதனையின் போதே கஞ்சாக கைப்பற்றப்பட்டதாக உப்புவெளி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த இரு பெண்களை ஆதாரத்துடன் கைது செய்த போதும் தமக்கு இதில் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று அவர்கள் மறுத்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் யாழ்ப்பாணத்தில் வைத்தே கஞ்சா பொதிகளை தம்மிடம் தந்து , திருகோணமலை அனுராதபுர சந்தியில் வருபவரிடம் கொடுக்குமாறு கோரியதாகவும் பெண்கள் இருவரும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் மூவரையும் கிடைக்கப்பெற்ற ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0
Shares