வாத்துவ சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இருவருக்கும் விளக்கமறியல்

வாத்துவ பகுதியில் உள்ள ஹோட்டலில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வின் போது திடீரென சுகயீடமடைந்திருந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இரண்டு பேருக்கும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இரண்டு பேரையும் எதிர்வரும் 17ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பாணந்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டதாக அத தெரண செய்தியாளர் கூறினார்.

களியாட்ட நிகழ்வை ஏற்பாடு செய்த நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் பிரச்சார அதிகாரி ஆகிய இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.

வாத்துவை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கடந்த சனிக்கிழமை இரவு இடம்பெற்ற களியாட்ட நிகழ்வின் போது திடீரென சுகயீடமடைந்த நான்கு பேர் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்திருந்தனர்.

0
Shares