சமூர்த்தி கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வு இன்று

சமூர்த்தி கொடுப்பனவை பெறுவதற்கு தகுதி வாய்ந்தவர்களுக்கு சமூர்த்தி கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பொலன்னறுவையில் இந்த நிகழ்வு ஆரம்பமாகவுள்ளது.

தற்போது சமூர்த்தி கொடுப்பனவை பெற்றுக்கொள்ளாத, குறைந்த வருமானமுடைய 1 இலட்சத்து 50 ஆயிரம் குடும்பங்களுக்கு புதிதாக சமூர்த்தி கொடுப்பனவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், முதற் கட்டமாக ஆயிரத்து 500 புதிய பயனாளிகளுக்கு சமூர்த்தி கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

மேலும், ஆறு மாதங்களுக்குள் இந்த கொடுப்பனவை பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
Shares