இன்று பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இலங்கையின்  வடக்கு , வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன .

வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 50 mm க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் குறித்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பாக இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறும் வானிலை அவதான நிலையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது. (இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் ஐஸ் மழை பொழிவதற்கான சாத்தியக்கூறுகள் சிறிதளவில் காணப்படுகின்றது)

0
Shares