ஆசிய கிண்ண வலைப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் இவ்வாண்டின் சாம்பியனானது இலங்கை

ஆசிய கிண்ண வலைப்பந்தாட்டப் இறுதிப் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று இவ்வாண்டிற்கான சாம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது

நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் சிங்கப்பூர் அணியை வீழ்த்தியதன் மூலம் இலங்கை அணி சாம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் அணியை 69 க்கு 50 என்ற அடிப்படையில் இலங்கை அணி வீழ்த்தியுள்ளதுடன் இத் தொடரில் இலங்கை அணி ஒரு போட்டியிலும் தோல்வியை சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

9 ஆண்டுகளின் பின்னர் இலங்கை அணி ஆசிய கிண்ணத்தை வென்ற சந்தர்ப்பம் இது என்பதுடன் ஆசிய கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டிகள் இம்முறை சிங்கப்பூரில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்தத் தொடரில் இறுதிப் போட்டிக்கு தெரிவான இலங்கை மற்றும் சிங்கப்பூர் அணிகள் அமெரிக்காவில் நடைபெறவுள்ள உலக கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டியில் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

0
Shares