இலங்கையின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை

கிழக்கு,மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களிலும் சில பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் குறித்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்று அறியப்படுகிறது.

மேலும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு வானிலை அவதான நிலையம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

0
Shares