இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 வது டெஸ்ட் போட்டி

 

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்து முதல் Innings இல் 331 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

40 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2 வது இன்னிங்கை ஆரம்பித்த இங்கிலாந்து அணி 3 வது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 114 ஓட்டங்களை எடுத்திருந்தது.

நேற்று 4 வது நாள் ஆட்டம் நடைபெற்றது. இதன்போது அலஸ்டைர் குக் தனது கடைசி இன்னிங்சில் சதம் அடித்தார். அவரைத் தொடர்ந்து ஜோ ரூட்டும் சதம் அடித்தார்.

இறுதியாக 112.3 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 423 ஓட்டங்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்து 2வது Innings ஐ நிறுத்தியது.

இந்நிலையில் இந்தியாவிற்கு 464 ஓட்டங்களை இங்கிலாந்து வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

0
Shares