இன்று இலங்கையின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மட்டக்களப்பு மாவட்டத்திலும் சில சில பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

இலங்கையின் ஏனைய பகுதிகளில் சீரான வானிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் குறித்த பிரதேசங்களில் பலத்த காற்றும் தற்காலிகமாக வீசக்கூடும்.

மேலும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வானிலை அவதான நிலையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

0
Shares