5 வது மற்றும் கடைசி டெஸ்டில் தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து அணி

இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 வது மற்றும் கடைசி டெஸ்டிலும் இந்திய அணி தோல்வியடைந்ததால் 4 க்கு 1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இங்கிலாந்து மற்றும் இந்தியாவிற்கிடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

4வது நாள் ஆட்டத்தில் இந்தியாவின் வெற்றிக்கு 464 ஓட்டங்களை இங்கிலாந்து அணி இலக்காக நிர்ணயித்தது.

5ம் நாள் ஆட்டம் நேற்று ஆரம்பமாகிய வேளை சிறப்பாக விளையாடி முதல் சதத்தை பதிவு செய்த பந்த், 114 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய ஜடேஜா ,இஷாந்த் ,சமி ஆகியோரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க 345 ஓட்டங்களுக்கு இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

இதன் மூலம் இங்கிலாந்து அணி இந்திய அணியை வென்று 4க்கு 1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.

0
Shares