சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்க மறுத்த நடிகர் !

சூப்பர் ஸ்டார் ரஜினி “பேட்ட” படத்தில் மிகவும் பிஸியாக இருக்கிறார்.

அவ்வப்போது படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்படும் புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன . தற்போது படம் குறித்த தகவல் ஒன்றும் கிடைத்துள்ளது.அதாவது படத்தில் முக்கிய வேடத்தில் மலையாள சினிமா நடிகரும், நஸ்ரியாவின் கணவருமான பகத் பாஸிலை நடிக்க வைக்க படக்குழுவினர் தீர்மானம் எடுத்திருந்தனர் .

ஆனால் இது குறித்து பேச அவரை அணுகியபோது அந்நேரத்தில் அவர் “வரதன்” எனும் மலையாளத்திரைப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதால் இப்படத்தில் நடிக்க முடியாது என்று மறுத்துள்ளார்.

ஏற்கெனவே பகத் பாஸில் சில காரணங்களால் மணிரத்னம் இயக்கிய செக்க சிவந்த வானம் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

0
Shares