merry christmas

happy

நாளைய தினம் மழைவீழ்ச்சி மேலும் அதிகரிக்கும்

இலங்கையில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை நாளைய தினம் மேலும் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் குறிப்பாக பி.ப 2.00 மணிக்கு பின் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

வடக்கு, கிழக்கு மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களிலும் பல பகுதிகளில் காலையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

கிழக்கு, தென், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் சில பிரதேசங்களில் 100 mm அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் குறித்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

அத்துடன் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வானிலை அவதான நிலையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

0
Shares